கவிதைகள்

முதல் காதல்


முதல் காதல் நம் வாழ்வில் ஒரு பகுதியாய்
நம் நெஞ்சில் ஒரு ரோஜா செடியாய்
நம் நினைவில் ஒரு பசுமரதானியாய்
நம் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தியாய்
நம் புத்தகத்தில் ஒரு காய்ந்த பூவாய்
நம் நாவில் ஒரு இனிப்பாய்
நம் கன்னத்தில் ஒரு முத்தமாய்
மறைத்து வைத்த பரிசாய்
நம் பணப்பையில் ஒரு புகைப்படமாய்
நம் மனதில் புதையாமல்
புகைத்துக்கொண்டும்
அதை நினைத்துக்கொண்டும்
அதை மறந்ததாக நடித்துக்கொண்டும்
மறவாமல் இருப்பது
மறக்க விடாமல் தவிக்க விடுவது

பேருந்து

தினமும் பலரை நடக்காமல் இடம் மாறச்செய்யும் உனக்கு
எப்பொழுது கிடைக்கும் மாற்றம்?

மழை


எங்கே சென்றாய் நீ ?
எப்பொழுது வருவாய் நீ?
நீ வந்தால் பலருக்கு இன்பம்
சிலருக்கு துன்பம்
ஏன் இந்த வினோதம்?
இயற்கை தாயின் அன்பு பரிசே
சீக்கிரம் என்னை தொட்டுச்செல்
இந்த மண்ணில் விழுந்து மண்ணை மணக்கசெய்…..
கடலில் இருந்து வெப்பமாய் மாறி பொழிந்தாலும்
நீ ஏன் உப்பாக இருப்பதில்லை?

நண்பர்களே ஏதோ இந்த தடவ முயற்சி பண்ணி இருக்கேன்
தப்ப இருந்தா கொஞ்சம் திருத்தி விடுங்க……..

READ  அன்று……..

Comments

Praveen
August 6, 2010 at 12:22 pm

pratip no words to telll… kalakita…. especially tat mudhal kadhal kavitha chancesailla…. hmm unaku ulla evalo therama olinjukittu irukutha… nambavae mudiyala… just publish this is in some articles… kandippa recognize aagum… terror uh iruku… so dont waste your talent… GO to gr8 heights with this wonderful skill… All the best…Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Aim

July 29, 2010

%d bloggers like this: